POST: 2015-11-26T19:39:39+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-17
– பீட்டர் குயென்னெல்

விண்ணுலகின் பேரொளி வீசும் நிலைத்த மீன்களுக்கு
மண்ணுலகின் காவலர்கள் தனித்தனியே பெயரிட்டனர்.
நகர்பவை சிலவற்றைக் காட்டிலும்
இரவுகளுக்கு ஒளியூட்டுபவை என்பதன்றி
அவை இன்னவென்று அறிந்தாரில்லை!

ஒருபுறம் நோக்கினால், சேக்ஸ்பியர் திறமைமிக்க வணிக நோக்குடைய நாடகவியலாளராகக் காட்சியளிக்கிறார்.

சமகாலத்தின் தேவைகளை நிறைவு செய்பவராக எழுதினார்; இரு பெரும் பாவியங்களை அத்தகைய பா வகைகள் புதுமையானவையாகக் கருத்பபட்ட காலத்தில் யாத்தார்.

அர்மடாவின் தோல்வி பேரரசி எலிசெபெத் காலத்திய படைப்பாளர்களுக்கு தம்முடைய தாயகத்தின் வரலாற்றின் மீது தணியாத வேட்கையைத் தோற்றுவித்த காலத்தில் உள்ளத்தில் தைக்கத் தக்க வரலாற்று நாடகங்களை நிரலாக இயற்றிக் குவித்தார்.

சௌத்ஹேம்ப்டன், எஸ்ஸெக்ஸ் பிரபுகளையும் அவர்களுடைய அவையினரையும் மகிழ்விக்கும் நோக்கத்துடன் உயர்குடிப் பிறந்த ஆரவாரமிக்க இளைஞர்களும், களியாட்டத்தில் திளைத்த விளையாட்டுத்தனமான பெண்களும் கதைமாந்தர்களாக உலவிய காதல் சுவை ததும்பும் இன்பியல் நாடகங்களை அரங்கேற்றினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *