முனைவர் ஒளவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
வாழ்த்துரை
உயர்வற உயர்ந்ததன்றே!-4
வெள்ளி இடபத்தில் சேர, செவ்வாய் மேடத்திலும், புதன் மிதுனத்திலும் பொருந்த, கார்த்திகை உச்சமாக, வியாழன் மீனத்தில் நிலவ, சனியும் மதியும் இராகுவும் மகரத்தில் நிற்க, கேது கடகத்தில் நிலவ, மழை பொழியும் என்ற கோள்நூல் முடிபால்சையத்தில் பெருமழை பொழிந்ததெனக் காலத்தில் பிற்படும் பரிபாடல் குறித்துள்ளது.
நாள்மீனால் பெயரிடும் வழக்கம் மக்கள்பால் இருந்ததோ என்ற ஐயம் உண்டு. ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார் எனும் பெயர்களில் ஆவூர் மூலம் ஐயூர் மூலம் என்பன ஊர்ப் பெயர்கள் என உறுதி செய்வதும், அதே நிலையில் பூங்கண் உத்திரையார் பெயரை ஆராயும் போது ஆதிரை என்றாற்போல உத்திரை என்பதும் பிறந்த நாளால் வந்த பெயராகும் என்று இரண்டுபட உரைவேந்தர் எழுதுவது நோக்கத்தக்கது. மாமூலனார் என்ற பெயரில் மூலம் என்பது முதன்மையைக் குறிப்பதே அன்றி விண்மீனைக் குறிப்பதாக ஆகாது என்பாரும் உளர்.
விண்மீன் குறிப்புக்களையும் அவற்றின் இருப்புக்களையும் கணக்கெடுக்கும் வழக்கம் எவ்வாறோ கற்றதால் இக்குறிப்புக்களைக் கொண்டு திரு.எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை என்பார்.
கி.மு.160,
கி.மு.220,
கி.மு.397
கி.பி.17,
கி.பி.684,
கி.பி.694,
கி.பி.871,
ஆகிய பல ஆண்டுகளில் பரிபாடலில் கூறப்படும் கோள்நிலை இருந்தது என்றார். இதே காலக் குறிப்புக்களை எண்ணிய பேராசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார், இக்கருத்தைக் கடுமையாக மறுத்தார்.

Add a Comment