ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-2
ஸ்ரீராம் நிறுவனங்கள் வணிகத்தை முதன்மையாகக் கொண்ட நிறுவனம்தான்.ஆனால் வாழ்வியலில், பண்பாட்டில் மக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு பல வகையில் பெயர் சொல்லாமல் பணியாற்றுவது என்ற வழக்கத்தை பல்லாண்டுகளாக நடத்தி வருகின்ற ஒரு மாபெரும் நிறுவனமாகும்.
நேற்றைய இந்து நாளிதழை நீங்கள் பார்த்தால் தெரிந்திருக்கும்.
I for industry, I for inspiration, I for integration என்று எழுதியிருக்கிறார்கள்.
வணிகம் என்பது பொருளாதாரத்தை மட்டும் பொருளாகக் கொண்டதில்லை.வாழ்க்கைக்கு ஆதாரமாக பொருள் மட்டுமில்லை.இலக்கியம் பண்பாடு, கலை, மொழி என்பவற்றையெல்லாம் உணர்ந்து நடந்துக்கொள்கிற நிறுவனங்கள் என்பதைப் பார்த்தால் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அப்படி நிரம்பி வழிகின்ற நிறுவனங்களில் ஒப்பற்ற பணி செய்யும் நிறுவனமாக ஸ்ரீராம் நிறுவனம் உள்ளது என்பதற்கு இங்கு நிரம்பி வழியும் கூட்டமே சான்றாகும்.

Add a Comment