POST: 2015-12-13T10:42:00+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-4

இந்த விழாவைத் தொடங்கும்போதே எவ்வளவு மகிழ்ச்சியோடு நாம் தொடங்குகிறோம் என்று சொன்னால், ஒரு தலைமுறைதான் சிறப்பாக இருக்கும்.

ஆனால், கலைமுறை என்ற வகையில் மூன்று தலைமுறை சிறப்பாக இருக்கும் என்பதை இசை உலகின் முடிசூடா வேந்தர் லால்குடி அவர்கள் இங்கு வந்திருக்கிறார்.

அவருடைய திருமகளார் இங்கு உருக்கமாக பாடிய பாடலை நாம் கேட்டு லயித்திருக்கிறோம். இதில் என்ன பொருத்தமென்றால் அருமை பெருந்தகை சேசசாயி அவர்கள் உரையாற்ற அழைத்தது மட்டும் இல்லை. அப்படி உரையாற்றவில்லை என்றால் அவரைப் பாடிச் சொன்னால் அவரைப்போல இசையோடு பாடுபவர் எவருமில்லை. எனவே, பாடவும் தெரிந்து, நிர்வாகத் திறமையும் உள்ளவர் என்பது எளிதல்ல.

நீங்கள் படித்திருக்கலாம், ஐன்ஸ்டீனுக்கு சோர்வு வருகிறபோதெல்லாம் வயலினைக் கையில் எடுத்துக்கொண்டு வாசிக்கக் கற்றுக்கொண்டு வாசிப்பதாலேதான் தனக்கு ஊக்கமே வந்தது என்று சொல்வார்கள். அது வேண்டுமென்றால் ஐன்ஸ்டீனுக்குப் பொருந்தும். ஆனால், இப்போதும் இனிய இசையைக் கேட்டபடி நிர்வாகம் செய்வது என்றால் அது சேது சாயிக்கு பொருந்தும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *