ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-6
நண்பர்களே
இந்த பாரதி விழாவில் ஒரு நுட்பம் என்னவென்பதை, நான் சொல்ல விரும்புகிறேன்.
தலைவர் அவர்களே,
தமிழகத்தில் நாலாயிரம் கல்லூரி மாணவர்களும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கடந்த ஒரு மாதமாக பாரதியார் பேச்சுப் போட்டியில் பங்கு பெறுவதற்காக பேசி பழகி பேசியிருக்கிறார்கள்.
நாலாயிரம் இளைஞர்கள் பேசியதில் நாலாயிரம் பேர் என்று கணக்கெடுத்துக்கொண்டால், இது பத்தொன்பது ஆண்டு என்று கணக்கெடுத்தால், நாலாயிரம், மூவாயிரம், இரண்டாயிரம் என்று கணக்கெடுத்தால், தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு பாரதியார் பாடல் வரிகள் தெரிகிறதென்றால், ஸ்ரீராம் நிறுவனம் நடத்தும் பாரதி விழாவால்தான்.
இன்று அதற்கு நீதிபதியாக அமர்ந்திருப்பவர் டாக்டர்.பூவண்ணன், என்ற பேராசிரியர் கோவையில் கல்லூரியில் பேராசியராக இருப்பவர், அவர் ஒரு நீதிபதி அவர் சொன்னார், இந்தப் பிள்ளைகள் வாய் திறந்து பேசினால், ஒருவர் கூட கையில் குறிப்பு வைத்துக்கொள்வதில்லை. அதுவும் வாய் திறந்தால் 100 வரிகள் 150 வரிகள் தடைபடாமல் சொல்கிறார்கள். அதுவும், இந்தக் கலை இவர்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டார்.

Add a Comment