POST: 2015-12-13T11:00:05+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-7

இந்தக்கலை எப்படி வந்தது என்றால் நான் காரணம் சொல்கிறேன்.

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் நின்று பேசிய சுதா என்ற சிறுமி வாய்திறந்து பேசிய தமிழைக் கேட்டு அவ்வளவு பேரும் வியந்து ஆ என்றார்கள். அந்த சுதா டாக்டர் ஆகி அதுவும் எம்.எஸ். பட்டத்தில் முதல் பரிசு பெற்று அதுமட்டுமில்லை தனக்கு மருத்துவம் மட்டுமில்லை ஆன்மிக மகத்துவமும் தெரியும் என்று இன்று மேடைகளில் சுற்றிச் சுழன்று பேசுகின்ற டாக்டர்.சுதா சேஷையன் இந்த பண்ணையில் விளைந்தவர்தான்.

இவைகளெல்லாம் எவ்வளவு பெரிய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது என்று பார்த்தால் இதை நடத்துகிறவர்களைப் பற்றியும் நான் இரண்டு குறிப்பு சொல்ல வேண்டும்.

சான்றாக இந்த மாணவர்கள் அனைவரையும் எப்படியாவது திரட்டுவது, அவர்களின் பெற்றோர்களையும் அழைப்பது, இங்கு அமர வைத்தது, அவர்களுக்கு விருந்து தருவது என்று அவர்கள் இந்த விழாவில் கலந்துக் கொள்வதில் ஒரு பெரிய மகிழ்ச்சி தருகின்ற வகையில் நான் சொல்லுகின்ற வார்த்தை சுழலும் பம்பரமாக நம்முடைய சுந்தரேசன் அவர்கள்தான் இந்த ஆட்சிப் பொறுப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இன்னும் சொன்னால் எழுதுகிறவர்களுக்கு அகரமாகவும், எழுத்துலகத்தின் சிகரமாகவும் திகழ்கின்றவர் நண்பர் விக்ரமன் அவர்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *