POST: 2015-12-13T11:18:24+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-9

பாரதியார் கருத்துக்களை பரப்புகின்ற வகையில், பாரதியாருடைய பெருமிதத்திற்கு ஒரு சான்று சொல்வதென்றால், கவிதை பாடுவார்கள், கற்பனையாகச் சொல்வார்கள், தங்கள் மனத்தில்படுகின்ற காட்சிகளைச் சொல்வார்கள். ஆனால், இரண்டையும் ஒன்றாக இணைப்பதற்கு ஒரு தொடர் பாருங்கள்.

கலை வளர்ப்போம், கொல்லன் உலை வளர்ப்போம் இப்படி சொல்ல முடியுமா? கலை வளர்ப்பது ஒரு பணியாக இருக்கட்டும். அந்த பணி முடிந்த பின்னர் நாட்டின் வளத்தை வளர்க்கும் பணி உலையாக இருக்கட்டும், ஆலையாக இருக்கட்டும், தொழிலாளர்களாகட்டும், தொழில் வளர்ச்சியாகட்டும் என்று கலையும், தொழிலும் இரண்டு கண்களாக அமைய வேண்டும் என்பதை ஒரு கவியரசர் பாடுவது என்பதை நாம் பெரும்பாலும் கேட்டதில்லை.

காரணம் அதற்கு முன்னால் கவியரசர்கள் பலர் இருந்தாலும், அவர்களுக்கு தொழில் வளம் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்குரிய சூழல் இல்லை.

ஆனால், பாரதியார் யாரோ சொன்னது போல அவர் ஒரு
Poet as well as a planner and a philosopher என்று சொன்னார். எனவே, இந்த மூன்று முறைகளையும் பொலிந்து காட்டிய அந்தப் பெருந்தகை பாரதியாரை நினைக்கின்றபோதெல்லாம் இந்த நாடு வளம் பெற வேண்டும், இந்த நாடு உயர்வடைய வேண்டும், இந்த நாடு சிறப்படைய வேண்டும் என்பதற்குரிய வகையில்தான் மாணவ மணிகள் எப்படி இந்த போட்டியில் பங்குபெற்றார்கள் என்பதை நாங்கள் மகிழ்ந்து போற்றுகிறோம்.

இந்த வகையில் பண்பாட்டினுடைய புலத்தை ஒரு அங்குலம் உயர்த்திய பெருமை ஸ்ரீராம் நிறுவனத்தைச் சாரும் என்று சொல்லி உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *