POST: 2015-12-15T14:22:12+05:30

இரங்கலுரை-2

அடையாறு அரண்மனை அலங்கோலமாயிற்று.

பொழுது விடிந்தால் தன் அரண்மனையில் அமர்ந்து கொண்டு வாரிக் கொடுத்த பாரியாக வாழ்ந்தவர். திரு.எம்.ஏ.ஏம்.

கோடி கொடுத்த கொடைக் கோமானாக வாழ்ந்தும் வீடுகூட இல்லாமல் அவரைக் கவிழ்க்க நினைத்தவர்களை நினைத்தால் மனம் பதறுகிறது.

இன்னும் பத்தாண்டுகள் வாழ வேண்டியவர். தன் மனக்கவலையாலேயே தன்மீது மலர் மாலைகளை சுமந்து கொண்டது போல மலர் மருத்துவமனையிலேயே அவர் மறைந்தார்.

ஈடில்லாத ஒரு வள்ளலைத் தமிழகம் இனி காணப் போகிறதா என்று தெரியவில்லை?

முனைவர் ஔவை நடராசன் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *