POST: 2015-12-16T13:13:31+05:30

வான் வெறுப்பு

பெய்தது மழையல்ல, நாடுசெய்த பிழை.

ஏழைகளை மட்டும்தான் துயரத்தில் தள்ளுமென்று இல்லாமல் எட்டடுக்கு மாளிகையும் இருட்டடிப்புச் செய்த மழையிது.

கோடிகளை செலவிட்டாலும் கொடுமையைத் தாங்க முடியாத மக்களின் ஓலத்திற்கு விடிவேது?

வருணனை கடவுள் என்கிறார்கள், அவன் ஓர் அரக்கன் என்றல்லவா தெரிகிறது.

அறிவியல் வளர்ச்சியினால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பெயத் பேய்மழையைக் கண்டு பாரிஸ் நாட்டு மக்கள் புன்னகையோடு வாழ்ந்தார்களாம்.

ஆண்டு தவறாமல் மழைபெய்தால் நலிந்த மக்கள் நகராட்சி பள்ளிகளில் போய் தங்குவதும், மூன்றுநாள் விடுமுறை விடுவதும் இயல்பாகவே இருந்து விடுகிறது.

எவ்வளவு மழைபெய்தாலும் விடிந்தால் குளித்துவிட்டு நிற்கும் அழகிகளைப்போல மேலைநாட்டு சாலைகள் விளங்கும்.

தீங்கின்றி நாடெல்லாம் மழைபெய்ய வேண்டும் என்று ஆண்டாள் பாடினாள்.

ஆண்டாள் வேண்டுகோள் அரங்கன் காதில் விழவில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *