இருண்டு கிடக்கும் இந்தியாவில் பகுத்தறிவு ஒளியும், மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் தெளிவும் மலர வேண்டும்
நவராத்திரி விழாவில் யானைகளின் ஊர்வலம் நடந்த மைசூர் மாநகரத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்திருக்கிறது.
மைசூர் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார் நோபல் பரிசுபெற்ற வேங்கடராமன் இராமகிருஷ்ணன்.
மூடநம்பிக்கையும்,
அடிப்படையில்லாத மோசடி மருந்துகளும்,
சோதிடமும்,
வானத்து மீன்களைக் கணக்கிடுகின்ற பித்தலாடங்களும்,
இந்திய நாட்டிற்கு கேடு தருவனவாகும்.
இந்திய மக்களின் வாழ்நாள் கடந்த 100 ஆண்டுகளில் இரட்டிப்பாயிருக்கிறது. இதற்குக் காரணம் ஆங்கில மருந்துகளும், அறிவியலில் ஆய்வுகளில் நடந்த சோதனைகளின் வெற்றியும் ஆகும்.
இந்த நிலையில் இந்திய நாடு இன்னும் அறிவியல் அடிப்படையில்லாத ஓமியோபதி போன்ற மருத்துவமுறைகளை நம்பி நலிவது நல்லதில்லை.
மூட நம்பிக்கைகள் இந்திய நாட்டின் மூலதனமாக இன்னும் இருப்பதை நாம் களைய வேண்டும்.
இந்த வெடிகுண்டு விடுதலையில் வந்த செய்தியன்று. `மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’ என்று அண்ணாவால் நையாண்டி செய்யப்பட்ட ஆங்கில இந்து நாளிதழில் India needs to become more rational and to be less superstitious12.12.2015 அன்று வெளிவந்திருப்பதை நண்பர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Add a Comment