முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் தமிழோசை வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(3)
நிருபர் : ரொம்ப விரிவான பதில் அய்யா. இப்போ சொல்லிட்டே இருக்கையில் சொன்னீங்க இந்த வருஷக் கணக்கு, அதாவது 1500, 1000, 2000, 5000.
இப்போ இந்த செம்மொழிஅங்கீகாரம் கிடைப்பதற்கு இந்த வருஷக் கணக்கு மாத்திரம்தான் ஒரு கட்டளவா? வேறு ஏதேனும் Parameters இருக்கா ?
திரு.அவ்வை நடராசன்
ரொம்ப அருமையான கேள்வி கேட்டீர்கள். வேறு எப்படி என்ன சொல்ல முடியும்? காலப் பழமை ஒன்றுதான் சொல்ல முடியுமே தவிர, காவியச் செல்வம் என்று சொன்னால், காசுமீரத்தில் இருந்து எங்கள் காவியம் செழுமை உடையது என்றுசொல்லலாம் அல்லவா?
அதனால்தான் காலத்தை கணக்கிடுவதற்கு ஒரு வழி வைத்திருக்கிறார்கள். வேறு அலகு ஒரு மொழியினுடைய பெருமையைச் சொல்வதற்கு இலக்கியச் செழுமை, கருத்துக்களின் வளமை என்று அதனாலேதான் கிளாசிக்கல் என்று சொன்னால், செம்மை என்று சொன்னால், பழமை, உண்மை, நன்மை, பெருமை, செறிவு, சிறப்பு, ஆழம், திட்பம் போன்றபதினோருவகை வகைப்பாடுகளையெல்லாம் கணக்கிட்டீருக்கிறார்கள்.

Add a Comment