POST: 2015-12-31T21:55:13+05:30

முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் தமிழோசை வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(8)

13)நிருபர் : அது மாறுதல் நடக்கிறது. கண்டிப்பா.

திரு.அவ்வை நடராசன்

ஆனாலும் கூட அவர்கள் வளர்ப்பில் தாங்கள் தமிழர்கள் இந்த நாட்டுக்காரர்கள் இல்லை, இவர்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா? என்றகிற அச்சம் கொஞ்சம் என்பது இந்தக் குழந்தைகள் மனத்தில் இருக்கும். குருகுருப்பாக இருக்கிறதே தவிர அவர்கள் வளர, வளர அவர்கள் மறந்துவிடுகிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன். வளர வளர அவர்கள் மறந்துவிட்டு தானும் ஒரு பெருமைக்குரிய ஆங்காங் இளைஞன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறான்.

14)நிருபர் : அய்யா இன்று எங்கள் நேயர்கள் மூலமாக தொலைபேசி மூலமாக தமிழ் செம்மொழி என்பது பற்றி விரிவாக பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.
அய்யா, உங்களை ரொம்ப விரைவாக ஆங்காங்கில் சந்திப்பதற்கு ஆங்காங் தமிழர்கள் சார்பாக நாங்களும் ரொம்ப ஆவலோடு இருக்கிறோம். நன்றி வணக்கம்.

திரு.அவ்வை நடராசன்

ரொம்ப மகிழ்ச்சி. ஆங்காங் வணிகத்திலும், கடைகளிலும், மகிழ்ச்சியிலும், இன்பத்திலும் துள்ளிக் கொண்டிக்கிற நாடு மிகக் குறைவான நாடு.

எனவே, ஆங்காங் என்ற சொல்கையிலே இன்ப தேன் வந்து பாய்கிறது காதினிலே என்று என் நண்பன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
மகிழ்ச்சி.
ரொம்ப மகிழ்ச்சி,
மகிழ்ச்சி
நன்றி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *