POST: 2016-01-08T15:14:22+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !

அறிஞர் ஔவை நடராசன்-1

இலக்கணம் இன்றி இவ்வுலகம் இல்லை.
வரம்பில்லாத வயல் போல எதற்கும் இலக்கணம் இன்றேல் சீர்குலையும். துறைக்கேற்ப இலக்கணத்தின் பெயர் மட்டுமே மாறுபடுகிறது. எனினும் குறிக்கோள் ஒன்றே.

விண்ணில் செலுத்தும் செயற்கைக்கோளை மண்ணில் இருந்தபடி இயக்குவதும் இலக்கணமே.
உலகில் பல்லாயிரம் மொழிகள் உண்டு. அம்மொழிகளின் இலக்கண விதிகளே உலக அரங்கில் மொழியின் தகுதிப் பெருமிதத்தைக் காப்பன. இந்நிலையில் திராவிட மொழியினங்களில் தமிழ்மொழிக்கென்று தனித்த தகைமை உண்டு. காலந்தோறும் உலகச் சிந்தனைக்கு ஏற்பத் தன்னுள் சொற்களை உருவாக்கம் செய்வதற்குத் தமிழ்மொழியில் இலக்கணம் இடந்தருகிறது.

தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய படைப்பிலக்கியங்கள் வரை தோன்றி மலர்ந்த இலக்கிய அமைவுகளால் இந்நிலை உறுதிப்படுகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *