சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !
அறிஞர் ஔவை நடராசன்-3
உரைநடையில் இலக்கணம் என்ற வகையில் நூல்கள் பின்னர் தொடர்ந்து தோன்றலாயின. கடந்த இருநூற்றாண்டுகளில் உரைநடை மரபே ஓங்கி அமைந்தது.
1)தாண்டவராய முதலியார் – இலக்கண வினா விடை, 1820, 2)விசாகப்பெருமாளையர், இலக்கண வினா விடை, 1828,
3)அறிஞர் ஜி.யு.போப் – இலக்கணச் சுருக்க வினா விடை, 1846,
4)ஆறுமுக நாவலர் – இலக்கணச் சுருக்கம், 1881,
5)டி. டேவிட் – சிறுவர் சொல் இலக்கணம், 1885, 6)கிருஷ்ணமாச்சாரியார் – இலக்கண விளையாட்டு, 1891,
7)பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் நல்ல தமிழ் எழுதவேண்டுமா, 1972,
8)அறிஞர் பொற்கோ இலக்கணக் கலைக் களஞ்சியம், 1985,
9)சுத்தானந்த பாரதியார், நல்ல தமிழ் எழுதுவது எப்படி, 1994,
10) மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உரை நடை இலக்கணமும் கட்டுரை எழுதும் முறையும், 1999,
11)மருதூர் அரங்கராசன் – தவறின்றித் தமிழ் எழுத, 2004,
12)எம்.ஏ., நுகுமான் – அடிப்படைத் தமிழ் இலக்கணம், 2007,
13)அ.சண்முக தாசு, தமிழ் மொழி இலக்கண இயல்புகள்,
இப்படித் தொடரும் உரைநடை இலக்கண மரபுகள் குறித்த ஒரு தரவும் கூடத்தேவையாகிறது. இத்தகைய உரைநடை இலக்கண நூல்களில் பலவும் மரபிலக்கணஞ் சார்ந்தவை என்றே சொல்ல வேண்டும்.

Add a Comment