POST: 2016-01-11T13:07:15+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !
அறிஞர் ஔவை நடராசன்-4

காலத்திற்கேற்ப மொழியின் சொற்களும். தொடர்களும் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப இலக்கணமும் வளைந்து இடம் தரும்.

உரைநடை இலக்கண நூல்கள் தொன்மை மரபிலக்கணங்களின் செய்தியை உள்வாங்கி இன்றைய மொழியியற் சிந்தனையோடு புதிய சிந்தனைகளை முன் வைக்கின்றன.

மொழியியற் சிந்தனைகள் முழுதும் ஆங்கில மொழியின் ஊடாகவே தமிழில் இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வடமொழிப் புலமையாளர்கள் பலராக இருந்தனர். முந்தைய இருநூற்றாண்டுகளில் பயின்ற அறிவு மரபின் தொடர்ச்சியாக வடமொழியாளர்கள் வளர்ந்தனர். ஆனால் அம்மரபு இன்று இல்லை. அன்றைய வடமொழி வழக்காறுகளைத் தாண்டி ஆங்கில மொழியின் ஆளுமை ஓங்கலாயிற்று. இம்மாற்றம் ஆழ்ந்து நோக்கத்தக்கது.

இந்நூலாசிரியர் ஆங்கில மொழி வரலாற்றையும் வரைந்த அஃகி அகன்ற அறிவு நுட்பம் வாய்ந்தவர். இப்பின்புலத்திலிருந்துதான் இன்றைய இலக்கணக் கல்வியை விளங்கிக்கொள்ள முடியும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *