சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !
அறிஞர் ஔவை நடராசன்-6
கால்டுவெல், வீரமாமுனிவர், ஜி.யூ.போப், விண்சுலோ
தொடங்கி அயலவரின் தமிழாய்வு தமிழ் மொழி வளர்ச்சிக்குத் துணை செய்ததைப் போல அயலகத் தமிழ்ப் புலமையாளர்கள் தமிழ்மொழியின் இலக்கணத்தைக் கற்பிக்கப் பாடநூல்களை உருவாக்கி வருகின்றனர்.
அத்தகைய அறிவார்ந்த மரபில் ஆங்கிலம், தமிழ், வழக்கியல் பாங்குறத் தேர்ந்த சீர்த்தி வாய்ந்த சிந்தனைச் செம்மலாக இலண்டன் மாநகரில் நம் சீகண்டராசர் திகழ்கின்றார். இந்நிலையில் ‘இனிக்காதா இலக்கணம்‘ என்ற இந்நூல் ஈடிணையற்றதாகும்.
எழுபத்து மூன்று (73) பாடங்களை இரண்டு தொகுதிகளாகக் வழங்கியிருக்கிறார். முதற் பகுதி ‘அடிப்படை இலக்கணம்‘ என்பது. இதில் 35 பாடங்கள் இருக்கின்றன.
தொல்காப்பியம் தொடங்கி, தமிழ் மொழியில் சொல்லிலணக்கணமே மொழியின் இயங்கியல் தன்மைக்கு இன்றியமையாததாகிறது. அந்த வகையில் மொழியியற் சிந்தனையோடு மரபிலக்கணப் பொருண்மைகளை மாணவர்கள் எளிமையாகத் தெரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்.
ஒவ்வொரு பாடத்திலும் இலக்கண விதிகளுக்கு எளிமையான காட்டுகளைக் கொடுத்து அதற்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் சுட்டிச் செல்கிறார்.

Add a Comment