இரங்கலுரை
பேராசிரியர்.சி.எஸ்.மகாதேவன் மறைந்தார்
பொள்ளாச்சி கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து பிறகு அருட்செல்வரின் மனங்கவர்ந்த ஆலோசகராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய பண்பாளர் பேராசிரியர் சி.எஸ். மகாதேவன்.
மறந்தும் பிறரைக் குறை காணாத மாட்சியுடையவர்.அவருடைய மனம் போலவே சீரிய மக்கட்செல்வங்கள் சிறந்த பதவிகளில் சீரோடு விளங்குபவர்கள்.
என்னோடு 50 ஆண்டுகள் பழகிய அருமை வாய்ந்த மகாதேவன் மறைவு என் மனத்தை உருக்குகிறது.
தேன் போல் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதிய அந்த விரல்கள் சோர்ந்து நடுங்கியதைக் கண்டு கலங்கினேன்.
வாழ்க்கை என்பது இவ்வளவுதான் என்று ஆறுதல் கொள்ள வேண்டும்.
முனைவர் ஔவை நடராசன் .

Add a Comment