POST: 2016-01-16T13:34:27+05:30

கந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !
அறிஞர் ஔவை நடராசன்-7

இரண்டாம் தொகுதி ‘ஆராய்ச்சி இலக்கணம்‘ என்பதாகும்.
இதில் 38 பாடல்கள் உள்ளன.
இப்பகுதி கல்லூரி மாணவர்களும், ஆய்வு மாணவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய பல நுணுக்கங்களை விளக்குகிறது.

நூலாசிரியர் தம்காலத்து நிகழ்வுகளை வரைவதோடு இலக்கணத்திற்கு வருதல், தான் படித்த நூலில் இருந்த தவற்றை நீக்கும் முயற்சியின் ஊடாக இலக்கணத்தை விளக்கல் என்ற நிலையில் திறனாய்வுத் தெளிவோடு கருத்துக்களை விளக்கிச் செல்வது போற்றுதற்குரியது.

மாணவர்களுக்கு இடரிலா வகையில், சொற்களைச் சுட்டியுள்ளார்.

பெயரெச்சம், வினையெச்சம் என்று எழுதுவது தான் வழக்கம். இதனைப் பிரித்துத் தெளிவாகப் பெயர் எச்சம், வினை எச்சம் என்றே தம் பாடத்தில் விளக்கியிருக்கிறார்.

உணர்ச்சித் தொடர்கள் என்பதை வியப்புத் தொடர்கள் என்று மொழிகின்றார்.

வாக்கியம் (2) தொடர் என்பதற்கு இணையாக வசனம் எனக் கையாண்டிருப்பது கற்றலின் எளிமைக்கேற்பவே என்பதும் உணர்தற்குரியது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *