POST: 2016-01-18T16:48:17+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !
அறிஞர் ஔவை நடராசன்-9

கற்றல் நோக்கோடு உருவாக்கியிருந்தாலும் ஆய்வு மாணவர்களும் போட்டித் தேர்வுக்கு முன் நிற்போரும் தவறாது கற்க வேண்டிய கலைநூல் என்றே சொல்லலாம்.

மேலை நாடுகளுக்கும் சென்று தமிழ் வளர்த்த தனிநாயகம் அடிகள் போலப் பலரும் உள்ளனர். ஆனால் மேலைநாட்டிலேயே வாழ்ந்து அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் இலக்கணப் பாடத்தை உருவாக்கியவர்கள் என்கிற மாட்சி சிலருக்கே உண்டு.

அரிய இம் முயற்சியில் தனித்துச் சுட்டத்தக்க உயர்தகுதி பெற்ற சீகந்தராசா அவர்களின் இந்நூல் நூலாசிரியரின் கல்விச் செறிவையும் கடுமையான உழைப்பையும் பாடந்தோறும் பளிச்சிடுகின்றன. இந்நூல் தமிழ் நாட்டிலும் கற்றுத் தர வேண்டியதென்பதே என் துணிபு. இவரது பணி இன்னும் தொடர்வதாகுக.

‘இனிக்காத இலக்கணம் ‘உண்மையில் ‘இனிக்கும் தேனமுதம்‘.
இத்தகைய வித்தகப் புலமை வாய்ந்தவரைக் கண்டால் இன்றைய தமிழாசிரியர்கள் பலர் விதிர் விதிர்ப்பர் என்ற பாராட்டொன்றே இவரது புகழுக்குப் பொன்முடியாகும்.

சீகந்த அரையனார் செய்த செந்தமிழ் இலக்கணம்
ஆகும் தன்மையால் அனைவர்க்கும் அரியதால் !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *