ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-5
சோபனா ரமேஷ் அவர்கள், ஓர் ஆடலரசு மட்டுமில்லை. பாரதியார் பாடல்களுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு பாரதி பாடல்களுக்கு இசையமைத்ததுபோல, அதற்குரிய வகையில், ஆடல்கலைக்கு பொருந்திய பாடல்களை ஒரு நூறு பாடல்களுக்கு மேல் தேர்ந்தெடுத்து, உலகம் முழுவதும் சுற்றி வந்து பாரதி பாடல்களை ஒரு ஆடல் நிகழ்ச்சியாக பல நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டி, தன்னை ஆட்படுத்திக் கொண்டவர் சோபனா ரமேஷ் அவர்கள்.
சோபனா அவர்களுக்கு இன்னொரு பெருமையும் சொல்ல வேண்டும். அவருடைய தேசிய மனத்தைச் சொல்வதா ? அவருடைய புகழ் வாய்ந்த தந்தை, பல்லாண்டுகளுக்கு முன்னால், ஆட்சிப் பணியில் ஒரு சிகரமாகத் திகழ்ந்து ஓய்வு பெற்ற வேதநாராணயன் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லை, சோபனா அவர்கள் தென்னாப்பிரிக்காவில், ஆஸ்திரேலியாவில் பல நாடுகளுக்குச் சென்று பாரதியாருக்கு, இந்த ஆடலுக்கு அழகு சேர்த்ததை நான் எண்ணிப் பார்த்து பெருமையடைகிறேன்.
அவருக்கு நாங்கள் இப்போது விருது வழங்குகிறோம்.

Add a Comment