POST: 2016-03-07T12:14:29+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-7

நீதியரசர் அவர்களே,

தமிழில் ஒரு பழைய நிகழ்ச்சி உண்டு.

கரிகால் வளவன் இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்தவன். அந்த நீதி வழங்கப் போகிறார் என்று சொன்னவுடனே, இவ்வளவு இளம் வயதில் அவர் எப்படி நீதி வழங்குவார் என்று கேட்டார்கள். கரிகால் வளவன் போய், நரை முடியை தன்னுடைய தலையிலே அணிந்துக்கொண்டு வந்து இப்போது நான் நீதி வழங்குகிறேன், ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டார்.

ஆனால், நரையில்லாமலேயே, திறமை ஒன்றுக்காகவே, பெருமையைப் பெற்றிருக்கிறவர் அருமை நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள்.

அவர்கள் இன்னும் பல்லாண்டுகாலம் இந்த துறையிலே இருந்து புதுடில்லியினுடைய உச்ச நீதிமன்றத்திற்கு தலைமை தாங்குகின்ற அளவுக்கு அவருக்கு காலம் காத்திருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்ல விழைகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *