புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-5.
———–
பிறகு நான் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலையை முடித்துவிட்டு, தியாகராசர் கல்லூரியில் சில ஆண்டுகள் பணி புரிந்தபோது, என்னுடைய வாழ்க்கையில் பிறகு, நான் தஞ்சை சரபோஜர் கல்லூரியில் பணியாற்ற வந்தேன்.
அங்கே பணியாற்றியபோது, நான் எனது மாணவர்களுக்கு, எழுச்சி வாய்ந்த என் குரலில் பாடங்களை நான் நடத்துவது அவர்களுக்கு பெருமிதமாக இருந்தது.
அவர்களுக்கு உரிய வகையிலே தமிழை
இனிமையாக எடுத்துக்காட்டுவது,
பாடல்களை சொல்லிக் காட்டுவது,
நாடகம் நடிப்பது,
எல்லா வகையிலேயும் தமிழார்வத்துடன் பங்கு பெறுவது,
வாய் திறந்தால் எந்தச் சொற்களையும் தமிழில் எப்படி ஒலிப்பது என்பதை கற்றுக்கொள்வது,
ஆங்கிலச் சொற்கள் படிகிற இடங்களில் எல்லாம் உரிய தமிழ்ச் சொற்களை கண்டறிவது
என்ற வகையில் சரபோஜி மன்னர் கல்லூரியில் எனக்கு இரண்டாண்டு காலம் எல்லையில்லாத மகிழ்ச்சியைத் தந்தது, பெருமிதம் தந்தது. அந்த தமிழ் வளர்ச்சி ஆர்வம் நிலைகொண்டது தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியில்தான்.

Add a Comment