தி இந்து நாளிதழ் 23.06.2016
——————————————-
1979- இல் திருமதி. சௌந்தரம் கைலாசம் அம்மையார்
அவர்கள் திருவாசகத்தின் 1000-ஆவது ஆண்டு விழாவை திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் திருவிடைமருதூர்த் திருக்கோயிலில் கொண்டாடினார்கள்.
தொடக்க நாளில் இந்தியத் தலைமை அமைச்சர் திரு. மொரார்ஜி தேசாய் அவர்களுடன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் வந்திருந்தார்.
புரட்சித் தலைவர் கோயிலின் முகப்பு வரையில் வந்து நின்றுவிட்டார்.
தலைமையமைச்சர் அவர்களை மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராக இருந்த ஔவை நடராசன் அவர்கள் தான் கோயில் வழிபாட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்.
அப்போது தலைமையமைச்சர் ஏன் புரட்சித் தலைவர் அவர்கள் உள்ளே வரவில்லை என்று கேட்டதோடு ஓ! அவர் தி.மு.க. அல்லவா? என்று சொல்லிவிட்டு வழிபாடு செய்தார்.
திருமதி. சௌந்தரம் கைலாசம் அம்மா அவர்கள் தன்னந்தனியராக இருந்து அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தியதை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.

Add a Comment