தனித்தமிழ் நூற்றாண்டு
————————————–
மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் -28.1.1977
————————————————————————————–
வாழ்த்துச் செய்திகள் -பக்கம் 15
————————————————-
உரைவேந்தர் ஔவை.சு .துரைசாமிப்பிள்ளை,
மதுரை .
இந்த நூற்றாண்டுத் தொடக்கல் விளங்கிய தமிழ்ப் பெரும் புலமைச் செல்வர்களில் முடிமணியாகச் சிறந்து விளங்கினவர் தவத்திரு மறைமலை அடிகள்.அவர்களுடைய தமிழ்ப் புலமைப் பெரும்பணிகளை வியந்து பாராட்டி மகிழாதவர்கள் கற்றவர் கூட்டத்தில் ஒருவரும் இரார்.அவருடைய ஆராய்ச்சித்திறனையும்,மொழி பெயர்ப்பு வளங்களையும் சமயப்பொருள் விளக்கக் கட்டுரை நூல்களையும் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்ற ஆராய்ச்சிக் களஞ்சியத்தையும்,அவருடைய செய்யுள் நலன்களையும் என் போன்றவர் நேரில் கண்டும் கேட்டும் படித்தும் இன்புறுவது இயல்பு.

Add a Comment