உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின்
————————————————————————-
உமாமகேசுவரர் விரதம்
—————————————
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தையின் தன்னேரில்லாத தமிழ்த்தலைவராகத் திகழ்ந்தவர். கரந்தையை தோற்றுவித்து வளர்த்தத் தலைவரிடம் ஒளவை சு. இருபது வயது இளைஞராய் இருந்தபோதே தென்னாற்காட்டிலிந்து வந்த சிறுவன் என்று அரவணைத்து, தமிழ்ப்புலமை பெற துணை நின்றார். கரந்தை கவியரசுப் புலவர் சிவ குப்புசாமி, சாமி சிதம்பரனார் உடனிருந்து வித்துவான் பட்டம் எய்தி, சங்க நூல்களுக்கு உரை எழுதும் ஊக்கம் பெற்றார்.
இப்புலமை வளமே, அகநானூற்றுக்கு உரையெழுதிய கரந்தை கவியரசுக்கு துணை நின்று ஐங்குறு நூற்றுக்கு உரை எழுதத் தொடங்கினார். தமிழ்வேள் உமாமகேசுவரனார், சர். ஏ.டி. பன்னீர்செல்வமும் தூண்களாக நின்று ஐங்குறுநூறு உரை எழுதும் உரிமைக்கு டாக்டர். உ.வே.சா. தடை வழக்கிட்டப்போது, அதனை தகர்த்தப் பெருமையும் இவர்கள் இருவரையே சாரும் ! சரையு ஆற்றங்கரையில் தமிழவேள் தண்டமிழாசாணாகிய வாழ்வை முடித்துக்கொண்டார், அந்நாள் ஒர் வெள்ளிக்கிழமையாகும். அந்நாள் முதல் ஒளவை – சு வின் உயிர் நீங்கும் வரை உணவை நீத்து உண்ணா நோன்பு ஏற்றியதாக என் பாட்டியார் கூடல் மாநகரில் நினைந்து நெகிழ்ந்து கூறினார்கள், ஆக இதனை நாற்பதாண்டு விரதம் எனலாம்!

Add a Comment