POST: 2016-09-30T09:28:59+05:30

செப்டம்பர் 30 – மொழியாக்கத் திருநாள்
====================================

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே

(தொல் : பொருள் : மரபியல் :98)

பௌத்த அறிவுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் The great learning temple என்ற மடாலயத்தில் 500க்கும் மேற்பட்ட துறவிகளின் முக்கியப்பணி பெளத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்து பெரும்பான்மையான ஏடுகள் பாலி மொழியிலும் சில ஏடுகள் சமசுகிருதத்திலும் இருந்தன.

பௌத்த சமய சூத்திரங்களையும் அறநெறிகளையும் மொழியாக்கம் செய்ய ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும்.மொழிபெயர்த்த பிரதிகளை மூத்த துறவிகள் நுண்ணாய்வு செய்து,அறிஞர் குழுவால் மூலப்படியையும் நுண்ணாய்ந்த படியுடன் ஒப்பீடு செய்யப்படும்.முழுமையாகத்திருத்தம் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அந்த மொழிபெயர்ப்பை பிரதி எடுப்பதற்கு நாற்பது துறவிகள் வேலை செய்வார்கள்.பிறகு சீனாவில் இருக்கும் வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இப்படி தங்கள் தங்கள் வாழ்நாள் தொண்டாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளில் ஒருவர் தான் யுவான் சுவாங் ஆவார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *