மாண்புமிகு முதலமைச்சர் அம்மையார் அவர்களின் உடல் நலம் விசாரித்த பிறகு பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் அப்பலோ மருத்துவமனையில் 27.10.2016 வியாழக் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றிய செய்திக் குறிப்பு
===================================================
தமிழக மக்களின் நெஞ்சத் துடிப்பாக திகழும் மாண்புமிகு முதலமைச்சர் அம்மையார் நலம் பற்றி அறிவதில் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி உலக மக்களே எவ்வளவு துடிப்பாக இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
மக்கள் காட்டும் நம்பிக்கையை மேலும் உறுதியாக்கிக் கொள்ளும் வகையில் நான் இன்று (27.10.2016) அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தேன்.
கலங்கிய கண்களோடு ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கே நின்றபடி உள்ளனர்.வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்ற நம் மாண்புமிகு முதலமைச்சர் அம்மையார், இந்த நோய் துன்பத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு பெருமிதத்துடன் மீண்டு வருவார் என்று நலம் விரும்பிகளும் ,நண்பர்களும் கூறிய போது எனக்கு பெரிய ஆறுதலாகவும் ஊக்கமூட்டுவதாகவும் இருந்தன.
மாண்புமிகு முதலமைச்சர் அம்மையார் நலம் பெற்று விரைந்து திரும்பி வந்து தம் தொண்டுகளைத் தொடர வேண்டும். எங்கள் நெஞ்சார்ந்த விழைவை கோடி மக்களின் வேண்டுதலோடு இணைத்துக்கொள்கிறோம் .
ஆர்வமும் ,விழைவும் ஆக்கமூட்டும் நன் மருந்துகளாகும்.

Add a Comment