எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-11
———
பழைய முதலமைச்சரோடு அன்பாகப் பழகினேன் என்பதை வைத்து, யாராவது கலகமான தகவல்களைச் சொல்லியிருக்கலாம் என்று நானாக நினைத்துக் கொண்டேன். மொழிபெயர்ப்புத் துறையில் இருந்த போது, அவரைப் பார்க்கச் செல்வதற்கான, அலுவல்ரீதியான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதன்பின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஐந்தாறு மாதங்கள் கழித்து, ஒருநாள் என்னைக் கூப்பிட்டார்.
எனக்குச் சரியாக நினைவில் இல்லை. ஒரு கோப்பில் ஏதோ ஒரு தகவலைப் பற்றி எழுதியிருந்தேன். காரோட்டிதான் இந்த பழிக்குப் பொறுப்பாக இருப்பார் என்று தெரிகிறது என்ற தொடர். கார் ஒட்டி என்று டைப் செய்திருந்ததை, நான் காரோட்டி என்று திருத்தியிருந்தேன். அது ஒரு பெரிய கோப்பு இல்லை. எப்படியோ அதை முதலமைச்சர் பார்த்திருக்கிறார். என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் அவர் முன்னால், நின்று கொண்டிருந்தேன். “உட்காருங்கள் நடராஜன்’ என்றார். ‘இல்லண்ணா! நான் நிற்கிறேன்’ என்று சொன்னேன் நான்.

Add a Comment