POST: 2017-04-15T11:44:11+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-12
———

‘அதென்ன? காரோட்டி என்று ஏன் எழுதினர்கள். கார் ஒட்டி என்று டைப் பண்ணியதில் என்ன தவறு?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் எம்ஜிஆர், ‘ஏன் திருத்தி எழுதினீர்கள்’ என்றார். “அண்ணா, ஒருவேளை நான்தான் தவறு பண்ணி யிருப்பேன். என்ன செய்வது? நான் படகோட்டி படம் பார்த்து, பழக்கப்பட்டவன்’ என்று சொன்னேன். அவ்வளவுதான்! எம்ஜிஆருக்கு மகிழ்ச்சி

கார் ஒட்டி என்று பிரித்து எழுதக்கூடாது. காரோட்டி என்று ஒரு சொல்லாகத்தான் எழுதவேண்டும். நான் படகோட்டி பார்த்து பழக்கப்பட்டவன் என்று சொன்னவுடனே, “தமிழே தமிழே!” என்றவாறே, என்னை ஆரத்தழுவிக்கொண்டார். எம்ஜிஆருக்கு மகிழ்ச்சி வந்தால், அதன் எல்லைக்கே போய்விடுவார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *