வில்லியம் சேக்சுபியரின் 453வது பிறந்த நாள்
==========================================
எண்ணிப்பார்க்க முடியாத எண்ண அலைகளையும் ஏறத்தாழ ஆயிரம் பேரை நம் எதிரே நிறுத்தி அவர்களின் உள்ள உணர்வுகளை ஓவியமாக்கிய ஒப்பற்ற நாடக கவி மன்னர் சேக்சுபியர் பிறந்த நன்னாளிது.
இலண்டன் மாநகரத்தில் ஆவான் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய சிற்றுரில் அவர்கள் இல்லத்தை சென்று காணும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
மீளவும் ஒருமுறை என் பெற்றோர்களை அழைத்துச் சென்றிருக்கிறேன்.
சேக்சுபியர் தான் ஆங்கிலம் ஆங்கிலம்தான் சேக்சுபியர் என்று தம்மை கரைத்துக் கொண்ட காவிய வேந்தர் சேக்சுபியர் ஆவார்.
“இன்னலும் நானும் இந்த நாளில்தான் பிறந்தோம். இளஞ்சிங்கக் குருளைகள் நாங்கள் யான் மூத்தோர் எனக்கு பின் பிறந்தவன் தான் இன்னல் என்பவர்” என வீரப் பெருமிதாத்தோடு சீசர் பேசிய உரைகளை “அஞ்சாமை அல்லால் துணை வேண்டாம்” என்ற திருக்குறளோடு ஒப்பிட்டு மகிழ்கிறேன்.

Add a Comment