POST: 2017-04-25T11:59:42+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-17
————-

இதைச் சொல்லும் போது, நான் இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும். உலகத்தமிழ் மாநாடு மதுரையில் மிகப் பெருமிதமாக நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் எண்ணம் எழுந்தபோது, என்னுடைய தந்தையாருக்கு விருது தருமாறு சொன்னவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்திராகாந்தி அம்மையார்தான், அதைத் தந்தார்கள்.

அந்த மாநாட்டின் நிகழ்ச்சிநிரலில், தமிழர்களின் தோற்றமும் தொன்மையும் என்பது முதல்நாள் கருத்தரங்கின் தலைப்பு. தமிழ் அறிஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும், தங்களின் பெயர் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற வேண்டும் என்ற பேராவல்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *