எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-19
————-
இன்னொரு நிகழ்ச்சி, திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த, திருவிடைமருதூர் கோவிலில் திருவாசகத்திற்கு ஒரு விழா நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய், அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நானும் போயிருந்தேன். அந்தத் திருவாசக விழாவைப் பெருமை பொங்க நடத்தியவர், கவியரசி சௌந்தரம் கைலாசம் அம்மையார்.
கும்பகோணத்தில் இருந்து, திருவிடைமருதூர் வந்தார் மொரார்ஜி தேசாய். உடன் வந்த முதலமைச்சர் எம்ஜிஆரோடு, நானும் விழாவுக்குப் போனேன். அந்தக் கோவிலின் முகப்புக்கு வந்தபோது, எம்ஜிஆர் என்னைப் பார்த்துச் சொன்னார். ‘அவ்வை! நான் ஒரு நாத்திகன். கோவிலுக்குள் வரமாட்டேன்’ என்று ‘பிரதமரிடம் சொல்லுங்கள்” என்றார். உடனே விறுவிறு என்று நடந்து, அந்தக் கோவிலின் முகப்பு அருகே இருக்கும் வாயிற் படியில் உட்கார்ந்து விட்டார் எம்ஜிஆர்.

Add a Comment