POST: 2017-05-07T09:48:44+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-29
————-

ஈரோட்டில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார் ஒரு அமைச்சர். அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டபோது, நீங்கள் இந்த மேடையில் இருந்தால் போதும். பேசவே வேண்டாம் என்றார் அமைச்சர். அந்த மேடையில் பல அறிஞர்கள் பேசியதைக் கேட்டு, நான் பொறுமையாகத்தான் இருந்தேன். ஆனால், மதுரைப் பல்கலைக்கழகத்து துணைவேந்தராக இருந்த வ. சு. ப. மாணிக்கனார் ஒரு சிறந்த கருத்தைத் தெரிவித்தார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்றுதான், நானும் எதிர்பார்த்து இருந்தேன்.

‘சீதை அசோகவனத்தில் இருந்தபோது, ஒரு குரங்கு வந்து குதித்தது. அப்போது சீதை சொன்னாராம். இது குரங்காக இருக்கட்டும் அல்லது அரக்கனாக இருக்கட்டும். எம்பிரான் நாமம் சொல்லி, ஒருக்கினன் அந்தோ என்பதுபோல, இந்த நூலை ஒரு குரங்கு என்றோ, நெறி தெரியாத அரக்கன் என்றோ, நான் சொல்ல மாட்டேன். தமிழின் பெயரால் வந்திருக்கிறது’ என்று முடித்தார். இதைவிட நாகரிகமாகப் பேச முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை.

ஆர்வத்தினால் ஒலைச்சுவடிகளைப் பதிப்பிப்பது, ஆயிரக்கணக்கான ஒலைச்சுவடிகள் இங்கு உள்ளது என்று ஏமாற்றுபவர்களை நம்பி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் ஒலைகளைத் தேடி அறிஞர்கள் அலைவது, இப்போதும் நடக்கிறது.

என்னுடைய தந்தையார் சொல்வார். உ.வே. சாமிநாதய்யர் வெளியிட்டபோதே, ஒலைச்சுவடிகள் தமிழகத்தில் முடிந்துபோய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆரூடக்காரர்களும், மருந்து எழுதுவதாகச் சொல்லிக்கொண்டு இருப்பவர்களும் போலிச்சுவடிகளைத் தயார் செய்து, இவைகள் ஆகமம், ஆரூடம் என்று சொல்கிறார்கள். அய்யருக்குப் பிறகு, ஒரு தமிழ் நூலாவது நம்மால் வெளியிட முடியவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார் என் தந்தையார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *