திரு.பார்த்தசாரதி நாயுடு
==========================
முன்னாள் மொழிபெயர்ப்பு இயக்குநர்
இரங்கற் செய்தி
=================
மறைவு : 07.05.2017
——————————–
மொழிபெயர்ப்புத் துறையில் பழுத்த அனுபவமும் ஆர்வமும் கொண்டு தமிழில் இருந்து ஆங்கிலத்திலும்ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் அயராது மொழியாக்கம் செய்த ஆற்றல் வாய்ந்த நண்பர் பார்த்தசாரதிநாயுடு அவர்கள் மறைவை அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.
அடக்கமும் ஆர்வமும் அனைவரிடமும் பரிவோடு பழகும் சால்பும் நிரம்பிய நாயுடு அவர்கள் மொழிபெயர்ப்புத்துறையின் கட்டமைப்பிற்குப் பெரிதும் துணையாக இருந்தவர். முப்பதாண்டுகளுக்கு மேலாகமொழிபெயர்ப்புத் துறையிலேயே சீரோடு பணியாற்றிய அவர் தன் முதுமையில் மறைந்தது இயல்புதான்.நாயுடு அவர்கள் காட்டிய வழியில் மொழிபெயர்ப்புத்துறை நாளும் உயர்ந்தோங்க வேண்டும். எறும்புஊர்வதுபோல் எழில் நிரம்பிய அவரின் ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களின் அழகு அனைவராலும்பாராட்டப்பட்டன.
நாயுடு அவர்களின் பயனுடைய வாழ்வு என்றும் ஊக்கம் தருவதாகும். என் தந்தையார் இயக்குநராகஇருந்தபோது எல்லா நிலைகளிலும் துணை நின்ற நாயுடு அவர்களின் பெருமையை பலமுறை புகழ்ந்துகூறியிருக்கிறார்கள். நாயுடு அவர்களை நான் மாணவனாக இருந்தபோதே பார்த்திருக்கிறேன். நாள்தவறாமல் அந்தி வேளையில் அவர் நண்பருடைய காரில் என்னையும் என் தந்தையாரையும் அழைத்துக்கொண்டுபோய் உட்லண்ஸ் உணவகத்தில் சிற்றுண்டி அருந்தியதை இப்போதும் நினைத்துக்கலங்குகிறேன். அறிஞர் கு.இராஜவேலு அவர்களுடைய நெறியான்மையின்படி அவர் பணியாற்றியதிறத்தைக் குறிப்பிட வேண்டும்.
கனிவும் கண்டிப்பும் நிறைந்த அவருடைய ஆட்சித்திறத்தை நம் மொழியாக்க நண்பர்கள் அறிந்து வளம்பெற வேண்டும் என்பது எனது நோக்கமாகும்.
—– ந.அருள்

Add a Comment