POST: 2017-05-11T10:18:41+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-32
————-

இதேபோன்று, ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி, புகழ்ப் பெற்ற விண்வெளி வீரர்கள் ராகேஷ்சர்மா மற்றும் ரவி மல்ஹோத்ரா, சென்னைக்கு வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று விருந்தளித்தார் முதலமைச்சர் எம்ஜிஆர். அவருக்கு என்ன தோன்றியதென்று தெரியவில்லை. திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வனப்பான, பொன்னிழை இட்ட அட்டையிட்டு, பரிசாக வழங்க வேண்டும் என்று விரும்பினார். உடனே ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை, அவ்வாறு தயார் செய்தோம்.

அந்த விருந்து நடைபெறும் ஐந்து மணி நேரங்களுக்கு முன்னால், என் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது ‘விருந்து நடைபெறும் இடத்தில், ஒரு திருக்குறளை எழுதிவைக் வேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். உடனடியாக ஒரு குறள் சொல்லவேண்டும். நாங்கள் எழுத, ஏற்பாடு செய்கிறோம் என்று கேட்டார்கள். திடீரென்று கேட்டால், எனக்கு நினைவு வருவதில்லை. அதோடு, அன்று ஏதோ அலுவல் காரணமாக அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *