எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-35
————-
அன்றைய கூட்டத்தில், பாவாணர் ஆர்வம் பொங்கப் பேசினார். அவருக்கு உடல்நலம் என்ன ஆகுமோ? என்று நான் இரண்டொருமுறை சென்று, அவரிடம் நினைவூட்டினேன். அதன்பின், மதியம் ஒன்றரை மணிக்குக் காரில் புறப்பட்ட பாவாணருக்கு மாரடைப்பு நேர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் நாற்பது நாட்கள் கழித்து, மதுரையிலேயே அவர் மறைந்தார். நண்பர் மதிவாணன்தான் உடனிருந்து அவரை முழுமையாகப் பார்த்து வந்தார்.
உலகத் தமிழ்ச்சங்க விழா மதுரையில் வெற்றியோடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் காலை எட்டரை மணிக்கு, என்னை அழைத்தார் எம்ஜிஆர். அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், அவர் தலையில் வழக்கமாக அணியும் குல்லாவை அணிந்திருக்கவில்லை.
என்னிடத்தில் எம்ஜிஆர் சொன்னார். இது உலகத் தமிழ்ச்சங்க விழா. அதனால் உலகத் தமிழர்க்கு உழைத்தவர்கள் என்றவகை யில், ஒருவர் பெயரைக் குறித்து, நான் ஒரு கோடி ரூபாய் தந்துவிடுவதாக அப்போது அறிவிக்கலாமா? என்று கேட்டார்.

Add a Comment