POST: 2017-05-17T09:00:08+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-38
————-

முதலமைச்சர் எம்ஜிஆருக்கு, தன்னுடைய திரைப்படத் துறையில் பங்குபெற்றவர்கள் பற்றிய மதிப்பு கூடுதலாக இருக்கும். அதற்கென்ன அண்ணா! நான்போய்ப் பார்த்துவிடுகிறேன் என்றேன் நான், பிறகு, நான் போய்ப் பானுமதியைப் பார்த்தேன். அவருக்கும் என்னை நன்றாகத் தெரிந்திருந்தது. வரன்முறைகள் பற்றி அம்மையாருக்குத் தெரியாத காரணத்தினால், அந்தச் சிக்கல் வந்தது. ஒரு முறை தன் மகனைக் காண்பதற்காக, அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்தார் பானுமதி அம்மையார் அங்கே போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து விட்டு வந்தார். அதன் பிறகு பார்த்தால், தொலைபேசிச் செலவு பெரும் அளவில் வந்து விட்டது.

அமெரிக்காவில் இருந்து இங்குள்ளவர்களுக்குப் பேசினாலும், அந்தப் பணத்தை இங்கே செலுத்த வேண்டிய முறைக்கு, அவர் கடிதம் தந்திருந்தார். இந்தக் கோப்பு நிதித்துறைக்குச் சென்ற போது, அதனை மறுத்து விட்டார்கள். இந்தப் பணத்தை, நீங்கள் எப்படியாவது பெற்றுச் செலுத்த வேண்டும். இந்த மாதிரி எவருக்கும் இசைவு தர முடியாது என்று கடிதம் வந்தது. என்னுடைய துறையைச் சேர்ந்த அதிகாரிகள், இது பற்றிப் பானுமதிக்குக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தின் படியை, நான் கையில் வைத்திருந்தேன். அந்தக் கடிதம் போய்ச் சேர்ந்த நாளில், அந்தப் படியைக் கையிலெடுத்துக்கொண்டு, முதல்வரைச் சந்தித்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *