எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-40
————-
என்னோடு உடன் வாருங்கள் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது என்று சொல்லிவிட்டு, என் இரண்டு தோள்களையும் தட்டிவிட்டுச் சென்றார். நானும் பின்னால் சென்றேன். தஞ்சைக் கோயிலுக்குள் நுழைந்ததும், எம்ஜிஆர் திடுமென்று கீழே தரையில் அமர்ந்து விட்டார். எல்லோரும் கோயிலுக்குள் சென்றனர்.
அவர் அமர்ந்ததும், சுற்றிலும் நான்கைந்து பேர் சேர்ந்து வளையமாக நின்று கொண்டார்கள். யாரோ ஒரு மருத்துவர், அங்கு வந்தார். அதுதான், அவர் நோய்வாய்ப்பட்ட முதல் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு, அவரால் பழைய எழுச்சியோடும் உணர்ச்சியோடும் பேச முடியாமலேயே போய்விட்டது. எனவே, எப்போதும் நான் அந்த நாளை நினைப்பதுண்டு. ஆம் அந்த நாள் என் இதயத்தில் முள் குத்திய நாள் தான்!

Add a Comment