POST: 2017-05-23T10:49:06+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-42
————-

திடுமென்று ஒருநாள், என்னைப் பதவியில் இருந்து, அகற்றி விட்டார்கள். என்னுடைய வருத்தம் இதுதான். தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறையில், அரசுச் செயலாளராக இருந்த, என்னை மாற்றவே முடியாது. அதற்குத் தக்க பதவி, வேறு துறைகளில் இல்லை. தன்னுடைய உறவினரை, அந்தப் பதவியில் அமர்த்த நினைத்து, சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

புரட்சித்தலைவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று காத்திருந்தேன். புரட்சித்தலைவரிடம், “உங்களைப் பற்றி, வாய்க்கு வந்ததைப் பேசுகிறார் நடராஜன்” என்று கதை கட்டியிருக்கிறார்கள். என்னைப் பற்றி, ஒரு கருத்து இருக்குமானால், அவர் மிகத்தெளிவாக இருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், என்னைப் பதவியில் இருந்து நீக்கினார்கள். ரொம்பத் தெளிவாக, என்னைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்து விட்டார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *