மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-57
————-
அதன்பின், இரவு வீட்டிற்குப் போயிருக்கிறார் ஜெகத்ரட்சகன். ஒரு நண்பர் மாலைமுரசு பார்த்துவிட்டு, உத்திரமேரூர் உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடப்போவது ஜெகத்ரட்சகன் என்று சொன்னார். அப்படியே, என்னை இறுகத் தழுவிக் கொண்டார். அவர் கன்னத்தில், கண்ணீர் ஆறாகப் பெருகிறது. நானும் அழுதேன். இந்த வாய்ப்பு, யாருக்குக் கிடைக்கும்? ஜெகத்ரட்சகனின் நாணயத்திற்கும், நம்பிக்கைக்கும், எம்ஜிஆர் செய்த கைம்மாறு அது.
அதன்பிறகு, உத்திரமேரூர் எப்படிப் போவது? என்பதைப் பற்றியெல்லாம், நாங்கள் சிந்தித்தோம். இன்று, பதினெட்டுக் கல்லூரிகளின் தலைவர் ஜெகத்ரட்சகன். என்னுடைய அண்ணன், ஒரு நாளாவது, துணைவேந்தராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர். இன்று பல கல்லூரிகளின் வேந்தராகவே இருப்பது, அவரதுச் சிறப்பு. அங்குலம் அங்குலமாக, அவரது குலம் பெறுகிற வளர்ச்சி, குழந்தைகள் பெறுகிற எழுச்சி, குடும்பம் பெறுகிற மலர்ச்சி, இதனை எண்ணி, நான் மகிழ்கிறேன்.

Add a Comment