POST: 2017-06-18T20:01:17+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-61
————-

அருந்தமிழ்ச் சொத்து
அமைச்சர் கா.காளிமுத்து
…………………………………………..

மதுரை தியாகராசர் கல்லூரியில் பாடம் நடத்தியபோது, மாணவர்களிடம்
சில தொடர்களைத் தொடர்ந்து சொல்லியிருக்கிறேன். இதனை மனனம் செய்தார், தமிழ் நடை வளரும் என்று சில பகுதிகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.

அந்தக் காலத்தில், பள்ளிகளில் ஒப்புவித்தல் போட்டி என்று நடக்கும். வீர உரைகளை எழுதித் தந்து, அதனை ஒப்புவிக்கச் செய்வார்கள்.

“போர்க்குறிக் காயமே, புகழின் காயம். யார்க்கு அது வாய்க்கும்?” என்று மனோன்மணீயம்
சுந்தரநாரின் நூலில் வருகிற பகுதியை, மாணவனாக இருந்தபோது, ஒப்புவித்தல் போட்டிக்காக
மனனம் செய்திருக்கிறேன். அதன்பிறகு, உயர்நிலைப் பள்ளியில் பேசியிருக்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *