POST: 2017-06-20T09:39:23+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-63
————-

சங்கு ஊதுவதற்கும் முன்பு எப்படி இதழ்களைக் குவிப்பார்களோ, அதுபோல உதடுகளைக் குவித்து, தன் உரைகளை ஆற்றுவார் நாவலர்.

நான் ஆசிரியராகப் பாடம் நடத்தியபோது, ‘அறிவு எப்படி வீழ்கிறது?” என்று நக்கீரர் சொல்லிய திருமுருகாற்றுப்படையில் இருந்து நாற்பது வரிகளைச் சொல்லியிருக்கிறேன். அதை மனனம் செய்து, மூன்று நாட்கள் கழித்து, அறிவு எப்படி வீழ்கிறது என்று சொல்லத் தொடங்கினேன்.

அப்போது கல்லூரி மாணவராக என்னிடம் பயின்ற திரு. காளிமுத்து, ‘நான் சொல்கிறேன்’ என்று திருமுருகாற்றுப் படையில் இருந்து வரிகளை மனப்பாடமாகச் சொன்னார். நான் அப்படியே சிலிர்த்துப் போனேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *