மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-65
————-
காளிமுத்து எங்கே போனாலும், ‘இது எங்கள் ஆசிரியர் ஒளவை இட்ட பிச்சை’ என்று பேசுவார். அது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவர் அமைச்சராக வந்தபோது, நான் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்தேன். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றதும், தலைமைச் செயலகத்தில் இருந்த என்னைப் பார்ப்பதற்காக, நேராக என் அலுவலக அறைகே வந்தார். அதற்குமுன்பு, சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது, அவர் வந்திருந்தார்.
அவர் வருகிறார் என்று தெரிந்ததும், நான் என் அலுவலக அறையில் இருந்து, வெளியே வந்தேன். அமைச்சர் ‘என்னைப் பார்க்க தாங்கள் ஏன் வரவேண்டும். நானே
வருகிறேன்’ என்று சொன்னேன். அவ்வளவு அன்புடையவராக, பரிவுடையவராக இருந்தவர் என் மாணவர் அமைச்சர் கா.காளிமுத்து ஆவார்.

Add a Comment