POST: 2017-09-02T09:52:24+05:30

கல்வி விளக்கு காந்திமதி அம்மையார்
=======================================

புகழ்வாய்ந்த கல்வித்துறை இயக்குநராக இருந்து, நானறிந்த நிலையில், முதன் முதலாக அரசால் இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டு, திரும்பி வந்து, அயல் நாட்டு விளைவுகளைப் பற்றி எழுதிய கட்டுரை என் நினைவில் மெல்ல படர்கிறது.

நாடறிந்த நாட்டுப்பற்றாளரும் சீர்திருத்தவானருமாக பெரியாரின் தோழருமான போராடி வாழ்ந்த சிதம்பரம் தண்டபாணி பிள்ளை அவர்களுடைய திருமகளே திருமதி.காந்திமதி.

அம்மையாரின் இளவல்தான் புகழ் செழித்த வழக்கறிஞர் சேக்கிழார்.

பள்ளிக்கல்வியின் நுணுக்கங்களைத் தேர்ந்து, பல்வேறு நிலைகளில் நுட்பமான செய்திகளை தம் துறையில் பரப்பிய பெருமையும் இவரைச்சாரும்.

தொண்ணூறு வயது என்பது வாழ்வின் விளிம்பில், உதிர்கிற நாளை மெல்ல நெருங்குகிற பருவம்.

திருமதி.காந்திமதி இன்றைய மகளிருக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்தார்.

தம் காரை தாமே செலுத்தி வந்த பெருமிதமும் காந்திமதி அம்மையாரின் புகழுக்குரியதாகும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *