மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-82
————-
புரட்சித்தலைவரைச் சந்திக்க, நாங்கள் இராமாவரம் தோட்டத்திற்குச் சென்றிருந்தோம். வழக்கமாக இராமாவரம் தோட்டத்தில் நீண்ட வரிசையில் அலுவலர்கள் பலர் காத்திருந்தனர்.
நானும் நண்பர் ஜெகத்ரட்சகனும் வரிசையில் காத்திருந்தோம்.
அந்த வரிசையில் அவரவர்கள் மாலை அணிவித்து நூல்களைக் கொடுத்துப் பரிசுகளை வழங்கி வந்தனர்.
நாங்களும், பொன்னாடைகளோடு இருந்தோம். வரிசையில் வந்த புரட்சித்தலைவர் எப்படியோ எங்களைப் பார்த்துவிட்டார்.
விடுவிடுவென்று விரைந்து வந்து, தமிழ் இப்படி எனக்காகக் காத்திருக்கலாமா? என்று சொல்லி ஆரத்தழுவிக்கொண்டார்.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். தமிழ்நாடே உங்களுக்காகக் காத்திருக்கிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எதைச் செய்தாலும் அதில் தமிழ் இருக்குமே? என்று சொன்னேன்.
என்னையும் ஜெகத்ரட்சகனையும் கையோடு அழைத்துக்கொண்டுபோய் அழகு பொங்கிய ஓர் அற்புதமான சரிகை மாலையை எனக்கு அணிவித்தார்.

Add a Comment