மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-90
————-
=====================
காவியக் கவிஞர் வாலி
=====================
1977 ஆம் ஆண்டில் இருந்தே குடிப்பழக்கத்தை தாம் நிறுத்தி விட்டதாக தெளிவாகக்கூறியவர் கவிஞர் வாலி.
ஸ்ரீரங்கத்து பிள்ளை சினிமாவுக்கு வந்தால் ஆன்மீகம்,ஆச்சாரம் எங்கே போகும் என்று கேட்காதீர்கள் என்று சொன்னவரும் வாலி தான்.
அழகிய தோற்றத்தில் இருந்த கவிஞர், வயது தளர்ச்சி வர வர தாடியும்,நெற்றியில் திருநீறும் துலங்க விளங்கினார்.
கடைசிகாலத்தில் பிடர் பிடித்து உலுக்கிய காசாசை கரைந்து விட்டதாம்.
அகோபில மடத்து மரபைச்சார்ந்தவர் என்ற வகையில் அழகிய சிங்கர் வாழ்வை இலக்கணம் குன்றாத வெண்பாக்களில் எழுதிக்காட்டினார்.
எவ்வளவோ பாடியும்,எப்படியெல்லாம் எழுதினாலும் கடைசிகாலத்தில் அவர் எதிர்பார்த்த கனவு நிறைவேறாமல் போய்விட்டது.
நாள் முழுவதும் தன் பெயரும்,பாடலும் ஒலிக்க வேண்டும் என்னும் தகுதிக்கு நூற்றுக்கு நூறு அவர் உரியவர்.
திரையுலகத்தில் திரிந்து கொண்டிருந்த தன்னை மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் கவியரங்கத்தில் தலைமை ஏற்கச்சொன்னவர் என் நண்பர் ஔவை நடராசன் என்று ஆயிரம் முறை பல மேடைகளில் சொல்லிக்கொண்டேயிருந்தார்…

காவியக்கவிஞர் வாலியின் என்றும் அழியாத பாடல்
———————————————————————————–
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
—
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிசேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
—
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
—
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
—
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

Add a Comment