மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-98
————-
====================================
கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம்
====================================
நெல்லையைச் சார்ந்த இளமையில் புலமை வளம் வாய்ந்த தமிழ்ச் செம்மலான புத்னேரியார் அறிஞர்கள் கா.சு.பிள்ளை, இரா.பி.சேதுப்பிள்ளை, கவிமணி அவர்களோடு நெருங்கிப் பழகியவர்.
சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் வளர்ப்புச் செல்வமாக புத்தனேரியார் கட்டுரைகள் கவிதைகள் வாராத செந்தமிழ்ச்செல்வி இல்லை.
எடுத்துக்காட்டாக, “தமிழை அழிக்கும் பகைக் கூட்டம்” என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு கவிதை……….
பொல்லாப் பகைக் கூட்டம்
புகழ்பெற்ற செந்தமிழின்
செல்வத்தைக் கொள்ளையிடும்
திட்டத்தால் ஏடுகளைக்
கடத்திமறைப்பார்கள்;
கருத்தைச் சிதைப்பார்கள்
கடலில் எறிவார்கள்;
கனலில் எரிப்பார்கள்
புத்தனேரியார், பொதுப்பணித்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த பிறகு, அவருடைய எழுத்துப்பணிகளுக்கு அவருடைய அலுவலகப் பணிகள் குறுக்கிட்டன போலும்.
புத்தனேரியாரின் தகுதிகளை போற்றிய புரட்சித்தலைவர் அவருக்கு பல வாய்ப்புகளை வழங்க நினைத்தபோதும், காலச் சூழலால் அவை நிறைவேறாமல் போயிற்று.

Add a Comment