மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-117
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
திரையுலகச் செந்தமிழைக் கலைத் தமிழாய்த்
தீட்டியவர்!
சங்க இலக்கியப் புதையலைத் தம்முடைய
சந்தத் தமிழ்க் கரங்களினால் அள்ளிக் கொடுத்தவர் !
இடைக்காலப் புலவர்களின் சொல் விளையாட்டுகளைத்
தம்முடைய இசைத் தமிழால் புதுப்பித்த புகழாளர்!
“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவன் உறைவும் ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்”
என்ற தேவாரப் பாடல்
“அன்றொருநாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாளில் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்”
என்று திரையுலகில் எதிரொலித்தது!
“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே”
என்ற பட்டினத்தார் பாடல்
“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை” என்று நம் காது வரை வந்து கருத்திலுள்ளும் புகுந்தது!

Add a Comment