மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-124
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–
எங்கள் பாட்டுத் தோட்டத்தில் பாடித்திரிந்த வானம்பாடியே! உன் கவிதைச் சிறகின் கந்தர்வ நிழல் எவ்வளவோ சுகந்தமும், இனிமையும் உள்ளதாய் இருந்தது.
ஒலி மண்டலம் முழுவதும் உனது உயிர்க் கவிதைகளே உற்சாக உலா வருகின்றன!
பாரதிக்குப் பிறகு பாரதிதாசனில் தமிழ் மேதை தெரிந்தது. உன்னில் தான் தமிழ் போதை புரிந்தது!
கம்பனுக்குப் பிறகு சந்தம் உன் ஒருவனிடத்திலேதான் சரணடைந்தது!
பாரதி நூற்றாண்டு விழாவிற்குச் சொர்க்கத்திற்குச் சொற்பொழிவாற்றச் சென்றிருக்கிறாய் என்று மாத்திரமே நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைவே எனக்கு இதமாக இருக்கிறது!
‘அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியதால் – இந்து மதத்திற்கே அர்த்தம் சொன்ன விவேகானந்தர் உலவிய சிக்காகோ மண்ணில் நீ விதையாய் விழுந்தாய்! கல்லாய்ப் புதைந்தாய்! அமெரிக்கா சென்றபோது “தாய்” சார்பாக மாலை அணிவித்தேன்.
நான் மாலை அணிவிக்கிற மிகச் சிலரில் இதுவரை எவருக்கும் உதிரிப் பூக்களால் ஆன வெள்ளை மாலை அணிவித்ததில்லை! வெள்ளை மாலை அணிவித்தபோதே விதவையாகி விட்டது இதயம்.

Add a Comment