POST: 2017-11-14T09:08:24+05:30

உலகத்தலைவர் மண்டேலா, அண்ணல் காந்தியடிகளிடமிருந்து விடுதலைப்போராட்டத்திற்கு எழுச்சிப்பெற்றார் என்பது பொதுவான கருத்து. அவருக்கு நேரு பெருமகனார் மீது பெருமதிப்பு இருந்ததாம்.

காந்தியடிகள் வாழ்க்கையில் எப்போதும் பணிந்து இருந்தவர்,எனினும் கொண்ட கொள்கையில் இரும்பு மனத்தோடு இருந்தார்.எதிர்த்து மோதுவதில் ஆர்வம் காட்டியதில்லை,ஆனால் மன்னவனே எதிரில் வந்தாலும் அவரை புறந்தள்ளி விட்டுப்போவதில் நேரு எப்போதும் துணிந்த மனத்தோடு இருந்தவர்.

பல்கலைக்கழகத்தில் நேருவின் பேச்சைக் கேட்ட மாணவனாக கோர்பசேவ் இருந்ததாகவும் மக்களாட்சியின் உரிமை மாண்புகளை நான் நேருவின் உரையில் இருந்து தான் உணர்ந்து கொண்டேன் என்றார்.

நேருவின் கோட்பாடுகள் அவர் நினைத்தபோக்கில் தான் அமைந்தவை.
ஆரம்பக்கல்வி பரப்புவதில் அவர் ஆர்வம்
காட்டவில்லை.
படைத்துறைப்பெருக்கத்திலும் அவர் விருப்பம் காட்டவில்லை.
மாநில அதிகாரப்பகிர்வுக்கும் மனம் சுளித்தவர்.

தொழில் அதிபர்களின் தனியார் தொழில் முயற்சிகளுக்கு ஊக்கம் தருவது போல் இருந்தாலும் கடிவாளத்தை கையில் பிடித்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்.

மொழி வழி மாநிலங்கள் வளர்வதையும் சமயச்சார்புக்கு இரையாகக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அவருக்குப்பிறகு தனது ஆட்சிப் பரம்பரை வளர்க்க வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை என்றாலும் மகளுக்கு அந்த மனம் வளரந்தது.

அப்பாவைப் போல பெண் இருக்க மாட்டாள் போலத் தெரிகிறது!

அஞ்சாமை,தெளிவு,அறிவார்வம்,நாட்டைப்பற்றி நாளும் நினைத்தத்தியாகம்,உறங்காமல் உழைத்துக்
கொண்டிருந்த உழைப்பு…. இவைகள் எல்லாம் நேரு பிறந்த இந்நன்னாளில் நமக்கு நினைவிற்கு வர வேண்டும்.OK

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *